என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பன்றி காய்ச்சல்"
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தாலுகா வருஷநாடு அருகே உள்ள கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 54). இவரது மனைவி அமுதா (45). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது.
இதற்காக வருஷநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு சில நாட்களில் காய்ச்சல் சற்று குறையவே வீட்டுக்கு திரும்பினார். ஆனால் மீண்டும் அமுதாவுக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டது.
தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு என்ன காய்ச்சல்? என டாக்டர்கள் தெரிவிக்க வில்லை. இது குறித்து வருஷநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 7-ந்தேதி வரை 1,196 பேருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இது 1,965 பேராக உயர்ந்து உள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 6 பேர் பன்றி காய்ச்சல் நோயால் உயிரிழந்திருப்பதாக மாநில சுகாதார பணிகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. ஆனால் மத்திய அரசின் 2 மருத்துவமனைகளிலேயே 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே டெல்லிவாசிகள் பீதியில் உறைந்துள்ளன.
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள லாயம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் அதே பகுதியில் சொந்தமாக பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் குமார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. இதை தொடர்ந்து குமாரை அவரது உறவினர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்தனர். அதில் குமாருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவரை தனிவார்டில் அனுமதித்து தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுப்பற்றி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவுப்படி லாயம் கிராமத்தில் வேறு யாருக்காவது டெங்கு காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்ய ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை ரத்த பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கொடுத்தனர். தொடர்ந்து அந்த கிராமத்தில் டாக்டர்கள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் வியாபாரி பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
ஜோத்பூர், கோடா, தவுசா மாவட்டங்களில் பன்றி காய்ச்சலுக்கு நேற்று 4 பேர் பலியானார்கள். இதன்மூலம் இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.
மேலும் 87 பேருக்கு புதிதாக இந்தநோய் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜோத்பூரில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 39 தினங்களில் ராஜஸ்தானில் 2793 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் பன்றி காய்ச்சல் நோய் அதிகரித்து உள்ளது. குஜராத்தில் கடந்த 7-ந்தேதி வரை இந்த நோய்க்கு 54 பேர் பலியாகி உள்ளனர். 1187 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் 30 பேர் பலியாகி உள்ளனர். 301 பேர் பன்றிகாய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் பன்றிக்காய்ச்சல் பரவியது. இதில் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பன்றிக்காய்ச்சலால் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் பன்றிக்காய்ச்சல் ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பாதிப்பு கடந்த ஆண்டு இறுதி வரை இருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 1-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 48 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
இதையடுத்து பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி கூறுகையில், “தமிழகத்தில் பன்றி காயச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தினமும் சிகிச்சைகக்காக ஒன்று அல்லது 2 பேர் வருகின்றனர். மதுரையில் பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்லை” என்றார்.
நாட்டிலேயே இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ராஜஸ்தானில் அதிக பட்சமாக பன்றிக்காய்ச்சலுக்கு 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 31 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இதேபோல் குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பன்றிக்காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். #Swineflu #fever
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் மாதவன் (வயது52). டீக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்படவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி புவனேஷ்வரி (வயது 39). இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரில் மருந்து மாத்திரைகள் சாப்பிட்ட பின்பும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் நேற்று முன்தினம் புவனேஷ்வரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அவரது ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் தொற்றி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து புவனேஷ்வரிக்கு பன்றி காய்ச்சல் குணமடைய ஊசி மருந்துகள் செலுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
வடமதுரை:
வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பருவ நிலை மாற்றம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். காய்ச்சல் கண்டவர்கள் ஆஸ்பத்திரிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்த செய்திகள் வருவதால் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் வடமதுரை அருகே சித்தூரைச் சேர்ந்த அய்யப்பன் மகள் பாரதி (வயது 20) என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக வீட்டிலேயே வைத்தியம் பார்த்த போது காய்ச்சல் குறையவில்லை. இதனால் இன்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சுகாதாரத் துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த 6 விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுவை பகுதியில் 3, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்திற்கு தலா ஒரு வாகனம் மூலம் 10 நாளைக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளனர்.
இந்த பிரசார வாகனத்தை சட்டசபை வளாகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்- அமைச்சரின் பாராளு மன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், துணை இயக்குனர் டாக்டர் ரகு நாதன், உதவி இயக்குனர்கள் சுந்தரராஜன், கணேசன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். #narayanasamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்